கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள்
பொதுத் துறை வங்கியான கனரா வங்கியின் கிளை நிறுவனம் தான், கேன்பின் ஹோம்ஸ் வீட்டு வசதி நிதி நிறுவனம். இதன் தலைமையிடம் பெங்களூரு. இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆபிசர்ஸ் பிரிவில் உள்ள 40 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : 01.02.2014 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனையும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழியில் ஆளுமை, இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்துடன் அனுபவமும் பெற்றிருப்பது நல்லது.
தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப் பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.03.2014.
மேலும் விபரங்களுக்கு: www.canfinhomes.com/announcements/TERMS%20&%20CONDITIONS-JOC.pdf
No comments:
Post a Comment