சாங்யாங் கொரண்டூ காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் சாங்யாங் பிராண்டில் 2வது மாடலாக கொரண்டூ காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்கிறது மஹிந்திரா.
சாங்யாங் போர்ட்போலியோவில் உலக அளவில் மிக வெற்றிகரமான மாடல்களில் ஒன்று கொரண்டூ. இந்த நிலையில், புதிய மாற்றங்களுடன் கொரண்டூ மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. உலக அளவில் விற்பனையில் இருக்கும் அதே அம்சங்களுடன் இந்தியாவிலும் கொரண்டூ அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கொரண்டூ வருகிறது. ஆக்டிவ் ரோல்ஓவர் புரொடெக்ஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.
கொரண்டூவில் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment