ரஷ்யாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் விற்பனை
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில், முன்னணியில் இயங்கி வரும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் தன் விற்பனையைத் தொடங்கியுள்ளது. தன்னுடைய கேன்வாஸ் பீட் மற்றும் கேன்வாஸ் சோஷியல் (Canvas Beat and Canvas Social) போன்களுடன் தன் சந்தையைத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் தன் போன் விற்பனையைத் தொடங்க இருப்பதாக, மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது. முதல் நாடாக, ரஷ்யாவினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ரஷ்யாவில் விற்பனையை மேற்கொள்ள VVP Group என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 2014 ஆம் ஆண்டுக்குள் தன் 14 மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் மாதத்திலேயே, 60 சர்வீஸ் சென்டர்களை ரஷ்யாவில் நிறுவுகிறது.
அறிமுகம் ஆகும் போன்களில், ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இயங்கும் சிப் குவாட் கோர் சிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் மதிப்பு சேவைகளை, ரஷ்ய மொழியில் வழங்கும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் உதவியையும் மைக்ரோமேக்ஸ் பெற்றுள்ளது. இவை மைக்ரோமேக்ஸ் போன்களில் பதிந்து தரப்படும். இந்த ஆண்டுக்குள், மொபைல் போன் விற்பனையில், முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பிடிக்க மைக்ரோமேக்ஸ் முயற்சிக்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment