வீட்டு பிரச்சினை வெளியே தெரிஞ்சா இப்படித்தான்!
புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை…
புதுசா பொறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்குறதுன்னு…
புருஷன் சொன்னான், “எங்க அப்பா பேர் சிவசண்முகங்கிறதைத்தான் வைக்கணும்”னு.
பொண்டாட்டி சொன்னாள், “எங்க அப்பா பேர் கிருஷ்ணசாமின்னுதான் வைக்கணும்”னு.
விவகாரம் பக்கத்து வீட்டுக்காரர்கிட்ட போச்சி…
அவர் சொன்னார், “சிவராமகிருஷ்ணன்னு வை” அப்படின்னு.
உடனே இவஙக் கேட்டாங்க, “பேர்ல இருக்குற சிவ எங்க அப்பா பேர்ல இருக்கு, கிருஷ்ணன் இவங்க அப்பா பேர்ல இருக்கு … இடையில ‘ராம’ன்னு ஒரு வார்த்தை எப்படி வந்தது”ன்னு.
அதுக்கு பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்,
“அது எங்க அப்பா ‘ராம நாரயணன்’ பேர்ல இருந்து வந்தது”
# வீட்டு பிரச்சினை வெளியே தெரிஞ்சா இப்படித்தான்!
No comments:
Post a Comment