Translate

Sunday, 16 February 2014

எச்.டி.சி. பட்ஜெட் விடை போன்களைத் தருகிறது

எச்.டி.சி. பட்ஜெட் விடை போன்களைத் தருகிறது

எந்த நாடாக இருந்தாலும், மக்களின் மொபைல் போன் வாங்கும் தன்மை எத்தகையதாக இருந்தாலும், கூடுதல் வசதிகளுடன் கூடிய தன் மொபைல் போன்களை, மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் விலையிட்டு விற்பனை செய்வது எச்.டி.சி. யின் பழக்கமாகும். தற்போது, மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், தனக்கென ஓர் இடம் பிடிக்க, மத்திய நிலையில் விலையிட்டு விற்பனை செய்திடும் வகை யில், பல ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்க முடிவெடுத்துள்ளது.
அண்மையில் எச்.டி.சி. நிறுவனத் தலைவர் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கையில் இதனைத் தெரிவித்தார். இதுவரை கூடுதல் வசதிகளுடன் கூடிய நவீன போன்களை 600 டாலருக்கு மேல் விலையிட்டு வழங்கிய எச்.டி.சி. நிறுவனம், வளரும் நாடுகளில் மொபைல் சந்தையில் இடம் பிடிக்க, 150 முதல் 300 டாலர் வரையிலான (ரூ.10,000 க்கும் குறைவான அளவில்) விலையில், போன்களைத் தயாரித்து வழங்க உள்ளது. எச்.டி.சி. மிகமிகக் குறைந்த விலையிலான போன் களை என்றும் தயாரித்து வழங்காது எனவும் இந்நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment