Translate

Wednesday, 12 March 2014

அசுர வேகத்தில் வளரும் மொபைல் உலகம்...!

அசுர வேகத்தில் வளரும் மொபைல் உலகம்...!

தற்போது உள்ள இன்டர்நெட் மற்றும் மொபைல் வளர்ச்சியால் உலகமே நமது பாக்கெட்டில் இருக்கிறது எனலாம்

மேலும், பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன.

நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.

மேலும், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், 2013 ஆம் ஆண்டில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன -- தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 8 கோடியே 20 லட்சம் பேரில், 6 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் 19 கோடியே 80 லட்சம் பேரில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment