Translate

Sunday, 16 March 2014

இந்திய விமானப் படை பணியிடங்கள்

இந்திய விமானப் படை பணியிடங்கள்

இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான இந்திய விமானப் படை 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்சமயம் நவீனமய போர்த்தளவாடங்கள், அர்ப்பணிப்பு மிக்க படை வீரர்கள் ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் இந்தப் படை அறியப்படுகிறது. இந்தப் படையில் தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சார்ந்த திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களை குரூப் ஒய் பிரிவு ஏர்மேன் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.02.1994 முதல் 31.05.1997க்குள் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒட்டு மொத்த தோராய மதிப்பெண் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் தேவைப்படும். வொகேஷனல் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சேலம், வேலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்கள் தமிழ் நாட்டிலிருந்தும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்காக இந்தப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் வசிப்பதற்கான சான்று தேவைப்படும்.
முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். முதல் கட்ட தேர்ச்சி முறைக்கு உரிய ஆவணங்களுடன் ரெக்ரூட்மென்ட் ராலி நடக்கும் மையத்திற்கு செல்ல வேண்டும். உடல் தகுதித் தேர்வும் இருப்பதால், ஷார்ட்ஸ் மற்றும் ஷூவுடன் செல்ல வேண்டியிருக்கும்.
தகுதித் தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2014
இணையதள முகவரி: http://indianairforce.nic.in/pdf/recruitment_tambaram%20Rally.pdf

No comments:

Post a Comment