Translate

Sunday, 2 March 2014

தொழில்நுட்பம்யாஹு வெப் காமிராவில் பாலியல் உணர்வூட்டும் படங்கள்

தொழில்நுட்பம்யாஹு வெப் காமிராவில் பாலியல் உணர்வூட்டும் படங்கள்

யாஹு வெப் காமிராவில் இருந்து இலட்சக்கணக்கான படங்களை பிரிட்டன் உளவு அமைப்பான ஜி.சி.ஹெச்.க்யூ. சேகரித்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை பாலியல் உணர்வூட்டும் படங்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜி.சி.ஹெச்.க்யூ. மற்றும் அதன் அமெரிக்க சகாவான என்.எஸ்.ஏ. ஆகியவை அவைகளின் மக்கள் கண்காணிப்பு திட்டத்திற்காக, யாஹு வெப் காமிராவில் இருந்து மொத்தமாகப் படங்களை எடுத்து தங்கள் தகவல்களில் வைத்துக்கொள்கின்றன என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பல இலட்சக்கணக்கான படங்களை ஜி.சி.ஹெச்.க்யூ. அமைப்பு சேகரித்துள்ளதாகவும், அதில் 2008 ஆம் ஆண்டின் மத்தியிலான ஆறு மாதத்தில் மட்டும் உலக அளவில் 1.8 மில்லியன் படங்களை அந்த அமைப்பு சேகரித்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு படம் என்று சேகரிக்கப்படுகிறது.

இந்தத் தகவல் காரணமாக யாஹு கோபம் அடைந்துள்ளதோடு, தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்டத் தகவல்களின் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஜி.சி.ஹெச்.க்யூ. அமைப்பு பிரிட்டன் நாட்டு தகவல்களை சேகரிப்பதற்காகவே இத்தகைய பணியில் இறங்கியுள்ளதாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்கர்களின் தகவல்களைப் பிரித்தறிய அதனிடம் எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லை என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடன், அந்நாட்டு உளவு இரகசியங்களை அம்பலப்படுத்தியப் போது, மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையீடு இருப்பதாகத் தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment