இரண்டு வாரம் பழகுங்க!
இந்தியாவில் ஐபோன் விற்பனையில் புதிய அறிவிப்பு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இங்கு எந்த ஐபோன் ஒன்றை வாங்கினாலும், அதன் செயல்பாட்டில், வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டால், இரண்டு வார கால அவகாசத்தில் அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் போன் விற்பனையைப் பெருக்கிடும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது. சென்ற ஆண்டில், ஐபோன் 5சி மற்றும் 5 எஸ் போன்களை சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதப் பணத்தைத் திரும்ப அளித்தது. அதே போல, மாதத் தவணையிலும் தன் போன்களுக்கான விலையைச் செலுத்தலாம் என்ற அறிவிப்பினையும் வழங்கியது.
இரண்டு வாரத்திற்குப் பின்னர் திருப்பித் தந்தால், பணம் பெறும் திட்டத்தில், பணம் வங்கி கணக்கிற்கு மட்டுமே செலுத்தப்படும். ரொக்கமாகத் தரப்பட மாட்டாது. மீண்டும் போனைப் பெறுவதனால், அதனைத் தன் இருப்பில் கொண்டு செல்ல, ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். வழக்கம்போல, கிரெடிட் கார்ட் மற்றும் பண மாற்றத்திற்கான வங்கி செலவும் இருக்கும். இதற்கு இந்தியாவில் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்கள்? என்று இனிமேல் தான் தெரியும்.
No comments:
Post a Comment