Translate

Thursday, 27 March 2014

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

நடிகை கவுசல்யா தன் 100 கிலோ உடல் எடையைக் குறைத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் அறிமுகமாகி, பூவேலி, சொல்லாமலே, ப்ரியமுடன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் கவுசல்யா. குடும்பப் பாங்கான வேடங்களுக்கு ஏற்ற நாயகியாகத் திகழ்ந்தவர்.
பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் நடித்த திருமலை, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் அக்கா வேடத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சூழலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த கவுசல்யா, பின்னர் எதிலுமே நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி இயக்கும் விஷால் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வந்தார். நடிக்க வந்த போது மெல்லிய தேகத்துடன் காணப்பட்ட கவுசல்யா, இப்போது பருத்த உடலுடன் காணப்பட்டார்.
இதைத் தொடர்ந்து உடல் எடையை இயக்குநர் குறைக்கச் சொன்னதால், யோகா மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.
இப்போது 100 கிலோவிலிருந்து 79 கிலோவாகக் குறைந்துவிட்டதாக உற்சாகமாகத் தெரிவித்த கவுசல்யா, ஹரி - விஷால் படத்தில் நடிக்க வந்துள்ளார். மேலும் சில படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்யவும் பேசி வருகிறார்களாம்.

No comments:

Post a Comment