இந்திய கப்பல் படையில் வேலை
கேரள மாநிலம் எழிமலாவில் இந்திய கப்பல் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு டெக்னிகல் மற்றும் எக்சிகியூட்டிவ் பிரிவைச் சார்ந்த பணியிடங்களை சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன பிரிவுகள்: டெக்னிகல் (ஜெனரல் சர்வீஸ்) பிராஞ்ச் (இ அண்டு எல்), சப்மரைன் ஸ்பெஷலைசேஷன், எக்ஸிக்யூடிவ் (ஜி.எஸ்) / ஹைட்ரோ கேர் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது என்ற போதும் பொதுவாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், மரைன் இன்ஜீனியரிங், டெலிகம்யூனிகேஷன்ஸ், மெட்டலர்ஜி, மெக்கட்ரானிக்ஸ், ஏரோனாடிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் உள்ளிட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பு மதிப்பெண் அடிப்படையில் எஸ்.எஸ்.பி., நேர்காணல் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட்டை எடுத்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No. 04, Chankya Puri PO, New Delhi - 110 021
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.03.2014.
இணையதள முகவரி: http://www.nausena-bharti.nic.in/pdf/Triadentry/AppEnglish.pdf
No comments:
Post a Comment