நான் மதுவிற்கு அடிமையாகி விட்டேனா...?
சாதாரணமாக மது குடிக்கத் தொடங்கி, தினமும் அதை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும் நேரங்களில் பலரும் நினைக்கும் விஷயம் தான் மேற்கண்ட தலைப்பு! அந்த நாட்கள் மிகவும் சோர்வான நாட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் இது போன்ற மனச் சோர்வுமிக்க சூழல்களை பணியாளர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எப்படி கையாளுகிறார்கள் என்ற விஷயம் மிகவும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
சில அலுவலக பணியாளர்கள் குடித்து கும்மாளமிடும் பஃப்களுக்கு சென்று தங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முயல்கிறார்கள். இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவுகள் எல்லாம் குடிமயமான இரவுகளாக மெதுவாக மாறத் தொடங்குகின்றன. இதுவே வார நாட்களில் பீர் பாட்டில்களை கையில் ஏந்த ஒரு தொடக்கமாகவும் உள்ளது. என்ன உங்களுக்கும் இந்த அனுபவம் உள்ளதா?
ஆல்கஹாலுக்கு அடிமையாகும் அறிகுறிகளை கண்டறிவதன் மூலம், அது தனது முழு சுயரூபத்தையும் காட்டுவதை ஆரம்பத்திலேயே முடக்கிப் போட முடியும்.
1. நேரம், காலம் எதையும் கணக்கில் கொள்ளாமல் நீங்கள் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலுடன் இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு மதுவை உள்ளே தள்ளியிருக்கிறீர்கள் என்று கணக்கு பார்க்கும் சக்தியையும் இழந்திருப்பீர்கள்.
2. குடிப்பதற்காகவே நீங்கள் தூக்கத்திலிருந்து விழிப்பீர்கள். இது உண்மையில்லாதது போல் இருந்தாலும், காலை நேரங்களில் குடிக்க விரும்புவர்கள் மதுவிற்கு அடிமையாகவே இருப்பார்கள்.
3. மீண்டும் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அதீதமாக இருக்கும். உங்களுடைய உண்மையான சூழ்நிலையை இந்த உணர்வு மறக்கச் செய்து விடும், ஆனால் உண்மை நிலையில் இருந்து உங்களால் தப்பிச் செல்ல முடியாது.
4. மதுப்பழக்கத்தின் போது வியர்வை, நடுக்கம், ருசி மங்குதல் மற்றும் வெறுப்பு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பீர்கள்.
5. நீங்கள் தினசரி செய்து வரும் செயல்பாடுகள் மற்றும் மற்றவர்களுடன் பழகுதல் போன்ற விஷயங்களை ஆல்கஹால் உலை வைத்து விடும்.
6. நீங்கள் விரும்பும் மனிதர்கள் பெருமையுள்ள இடத்திலிருந்து மதுவின் காரணமாக விழுந்திருப்பார்கள். உங்களுடைய பாதையில் அழிவை உங்கள் நண்பர்கள் பார்த்திருந்தாலோ அல்லது உங்களை தனிமைப்படுத்தி விட்டாலோ, அது நீங்கள் கண்டிப்பாக பின்னோக்கி நகர்ந்து சென்று தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய தருணம் என்று உணருங்கள்.
7. மதுவிற்கு அடிமையாகத் தொடங்கும் உங்களுடைய எடை குறையும் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
மதுப்பழக்கம் குடும்பங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், விதியற்றுப் போய்விடவும் செய்து விடுகிறது. ஆனால், அவ்வப்போது அளவுடன் மது அருந்துவது ஒன்றும் பாதுகாப்பற்ற விஷயம் கிடையாது. எனவே, பொறுப்பை உணர்ந்து குடியுங்கள்.
No comments:
Post a Comment