Translate

Monday, 7 April 2014

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 177

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 177

கூடுதல் திறன் கொண்ட பேட்டரி (3000mAh) ஒன்றுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்மார்ட் போன் Canvas Juice A177. இதன் அதிக பட்ச விலை ரூ.8,490. முன்பு Canvas Juice A 77 என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போன் ரூ.8,000 என விலையிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் போன் சற்று சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளது.
இதில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 5 அங்குல WFVGA டிஸ்பிளே, 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, புளுடூத் 4.0, வை-பி, ஜி.பி.எஸ். தொழில் நுட்ப பயன்பாடு, இரண்டு சிம் இயக்கம் எனப் பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இ-பே (eBay) வர்த்தக இணைய தளம் மூலம் இதனைப் பெறலாம்.

No comments:

Post a Comment