எல்.ஜி. எல் 70 இந்திய விலை ரூ. 15000
தென் கொரிய நிறுவனமான எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், சென்ற வாரம் தன்னுடைய எல்.ஜி. எல்70 என்ற மொபைல் போனை விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.15,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இணைய தளங்களில் இது ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் சேர்ந்து எல்.ஜி. எல் 90 என்ற மொபைல் போன் ரூ. 19,000 என விலையிடப்பட்டுள்ளது.
எல்.ஜி. 70ல், புதியதாக வந்துள்ள ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இந்த சிஸ்டம் தரும், இடைமுகம், அப்ளிகேஷன்களுக்கிடையேயான எளிமையான தாவல் அனைவரையும் கவர்ந் திழுக்கும் அம்சங்களாக உள்ளன. இதில் 4.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே தெளிவாகவும் துல்லியமாகவும் காட்சியினைத் தருகிறது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கும் திறனை, இதன் டூயல் கோர் ப்ராசசர் அளிக்கிறது. இதன் வேகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ். ராம் மெமரி 1 ஜி.பி.ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். இதன் கிராபிக்ஸ் ப்ராசசரும், அழகான காட்சிகளை தாமதமின்றி தருகிறது. இதில் இரண்டு சிம்களும், இரண்டு கேமராக்களும் இயங்குகின்றன. பின்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முன்புறமாக வெப் கேமரா இயங்குகிறது. இதன் பேட்டரி 2100mAh திறன் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment