Translate

Saturday, 12 April 2014

அதிகரிக்கும் கம்பியூட்டர் ப்ரோகிராமர்களின் எண்ணிக்கை...!

அதிகரிக்கும் கம்பியூட்டர் ப்ரோகிராமர்களின் எண்ணிக்கை...!

இன்று நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது.

அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும்.

இவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள். மற்ற 75 லட்சம் பேர் பொழுது போக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து, 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இயக்குபவர் களாகவும், இந்தப் பணிகளை நிர்வகிப்பவர்களாகவும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர்.

மொத்த சாப்ட்வேர் புரோகிராமர்களில், பொழுது போக்கிற்காக இதில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் 19 சதவீதம் பேர் உள்ளனர். சீனா இவர்களில் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இயங்குபவர்கள் 9.8 சதவீதம் பேர் ஆவார்கள்.

கம்ப்யூட்டர்களை இயக்கும் பணியாளர்கள் மற்றும் நிர்வகிப்போர் என எடுத்துக் கொண்டால், அமெரிக்கா 22 சதவீதம் பேரையும், இந்தியா 10.4 சதவீதம் பேரையும், சீனா 7.6 சதவீதம் பேரையும் கொண்டுள்ளது.

700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment