Translate

Sunday, 27 April 2014

நர்சிங் பணி வாய்ப்பு

நர்சிங் பணி வாய்ப்பு

நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி. முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் இந்த பெயர் மாற்றம் பெற்றது.
இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த நிறுவனத்திற்கு மிகப் பெரிய வளாகமும், 5 ஆயிரம் மாணவர்களும், 500க்கும் அதிகமான ஊழியர்களின் குடும்பங்களும் உள்ளன. இந்த வளாகத்தில் இந்த கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனையும் உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய நர்சிங் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: என்.ஐ.டி., அறிவித்துள்ள நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி: நர்ஸிங் தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். பணியனுபவம் தேவைப்படும்.

ஊதியம்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இதர தேவைகள்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இரவு மற்றும் பகல் என்று எந்தபொழுதிலும் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dean - ID, National Institute of Technology, Tiruchirappalli - 620 015, Tamil Nadu.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 30.04.2014
இணையதள முகவரி: <http://www.nitt.edu/home/>

No comments:

Post a Comment