Translate

Wednesday, 1 May 2013

இன்றைய ராசி பலன் 01/05/2013

மேஷம்
மேஷம்: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உங்களால் மற்றவர் கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி
கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவி னர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொ டர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.

தனுசு
தனுசு: மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திட்ட மிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டா லும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டு மென நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். மாலையிலிருந்து எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். சிறப்பான நாள்.

மீனம்
மீனம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும்.

    தங்களின் வருகைக்கு நன்றி

No comments:

Post a Comment