Translate

Friday, 17 May 2013

விற்பனையில் 10 லட்சத்தைக் கடந்த டிவிஎஸ் அபாச்சி

விற்பனையில் 10 லட்சத்தைக் கடந்த டிவிஎஸ் அபாச்சி

டிவிஎஸ் மோட்டர் கம்பெனி 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய டிவிஎஸ் அபாச்சி 10 லட்சம் வாகனத்திற்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் வாடிக்கையாளர் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பல பெரிய ஆட்டோமொபைல் விருதுகளை வென்று உலகின் 20 நாடுகளில் தன் தடத்தை பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அபாச்சியின் வெற்றிக்கு காரணம் அதன் புதுமையான அசத்தல் வடிவமைப்பு, உலகத்தரமான கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட பொறியியல் மற்றும் புதிய சிறந்த தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன், சொகுசான பயணம் கொடுக்கக்கூடிய அம்சங்கள் போன்றவைகளாகும். இவை மட்டுமின்றி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அவ்வப்போது மேம்படுத்தப்படும் அதன் செயல்திறனும் ஸ்டைலும், க்ராபிக்களும் அபாச்சியின் மேல் அதன் வாடிக்கையாளர்களுக்கு உள்ள நம்பிக்கையும் கவர்ச்சியும் குறையாமல் இருந்து வருகிறது. முதல் 150சிசி, 5 ஸ்பீட் மோட்டார் சைக்கிளாக அறிமுகப்படுத்தப்பட்ட அபாச்சி, 2007 ஆம் ஆண்டு 160சிசி கொண்ட அபாச்சி RTR என்றும், பின்பு 180 சிசி கொண்ட அபாச்சி RTR என்றும் மேம்படுத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு மேலும் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் அபாச்சி வெளியானது. 2011ஆம் ஆண்டு இந்திய இரு சக்கர வாகன வரலாற்றில் முதலாவதாக ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை RTR180 மாடலில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ARE (அபாச்சி ரேசிங் எக்ஸ்பீரியன்ஸ்) என்ற ஒரு வாய்ப்பை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம், இதன்படி அனுபவமிக்க பைக்ரேஸ் நிபுணர்களிடம் ரேஸ் பற்றிய நுட்பமான விஷயங்களையும் தங்கள் பைக்கின் திறன் பற்றியும் வாடிக்கையாளர்கள் கற்றுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment