டாட்டா மோட்டார்ஸ்: சர்வதேச வாகன விற்பனையில் சரிவு
![](http://img.dinamalar.com/business/admin/news/large_1368734801.jpg)
மும்பை:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், டாட்டா
மோட்டார்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், 81,241 வாகனங்களை விற்பனை
செய்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 87,377 ஆக
அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின்
சர்வதேச வாகன விற்பனை, 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.சென்ற ஏப்ரலில், சர்வதேச
அளவில், இந்நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை, 16.4 சதவீதம் சரிவடைந்து,
49,369 என்ற எண்ணிக்கையிலிருந்து, 41,272 ஆக குறைந்துள்ளது.மதிப்பீட்டு
மாதத்தில், இந்நிறுவனத்தின் சொகுசு வகை ஜாகுவர் கார் விற்பனை, 5,334
ஆகவும், லேண்டு ரோவர் கார் விற்பனை, 23,540 ஆகவும் உள்ளது. ஆக, இவ்விரு
பிரிவுகளின் கார் விற்பனை, 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இது தவிர,
இந்நிறுவனத்தின், டாட்டா டேவூ, டாட்டா ஹிஸ்பனோ கரோசிரா உள்ளிட்ட வர்த்தக
வாகனங்களின் விற்பனை, 39,969 ஆக உள்ளது.
No comments:
Post a Comment