Translate

Thursday, 16 May 2013

துப்பாக்கி முனையில் அதிரடிக் கொள்ளை! இரகசியக் கமராவில் பதிவான காட்சிகள் (படங்கள்)

துப்பாக்கி முனையில் அதிரடிக் கொள்ளை! இரகசியக் கமராவில் பதிவான காட்சிகள் (படங்கள்)


தபால் நிலையத்துக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய முகமூடிக் கொள்ளையர்களின் கையில் சிக்காமல் நழுவும் அம்மாவும் குழந்தையையுமே கீழே உள்ள வீடியோவில் காண்கிறீர்கள். உள்ளே புகுந்த காடையர் குழு பணத்தை தேடி அலையும் காட்சி இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Tulse Hill, Lambeth என்ற இடத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியே செல்ல விடவில்லை. ஒரு கொள்ளையன் அங்கிருந்த காசுக் கவுண்டருக்கு தீ வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. குறித்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 25 வயது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment