ஸ்பெஷல் 26 ரீமேக்கில் கமல்…?
வாவ்… இது கொஞ்சம் சுவாரஸியமான மேட்டர். உலகம் ஒரு வட்டம் என்பது உண்மைதான்.
கமல்ஹாசன் லிங்குசாமியின் தயாரிப்பில் நடிக்கிறார் என்ற செய்தி கொஞ்ச நாளாக உலவிக் கொண்டிருக்கிறது. நாம்கூட பேச்சுவார்த்தையில் கமல், லிங்குசாமி படம் என்று எழுதியிருந்தோம். இந்நிலையில் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியுள்ளது.
ஸ்பெஷல் 26 சிபிஐ அதிகாரியாக வேடம் போட்டு நகைக்கடை ஒன்றை ஆதியோடு அந்தம் கொள்ளைப்போட்ட பலே கும்பலைப் பற்றியது. அக்சய் குமார் ஹீரோ. பட், விஷயம் அதுவல்ல, படத்தை இயக்கியவர்.
ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கிய நீரஜ் பாண்டேயின் இரண்டாவது படம்தான் இந்த ஸ்பெஷல் 26. முதல் படம் ஏ வெட்னெஸ்டே-யைதான் கமல் உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து நடித்தார். நீரஜ் பாண்டேயின் முதல்பட ரீமேக்கில் நடித்தவர் கமல். இரண்டாவது படத்தின் ரீமேக் உரிமை இருப்பது திருப்பதி பிரதர்ஸிடம். கமல் திருப்பதி பிரதர்ஸுக்காக நடிக்கிறார் என்பது ஹாட் ரூமர்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு… ஹேய்.. கமல் திருப்பதி பிரதர்ஸில் ஸ்பெஷல் 26 ரீமேக்கில் நடிக்கிறார் என எதுவும் உறுதிப்படாமலே சங்கூதுகிறார்கள்.
யார் கண்டது… ஒருவேளை அது சங்கநாதமாகவும் மாறலாம்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment