தமிழகத்தில் முட்டை விலை 304 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 304
காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. .நாமக்கல்லில், தேசிய முட்டை
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி,
மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 302
காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, இரண்டு காசுகள் உயர்த்தி, 304
காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை
(காசுகளில்) நிலவரம்: சென்னை, 310, பெங்களூரு, 290, மைசூரு, 300,
ஹைதராபாத், 255, மும்பை, 290, விஜயவாடா, 255, கோல்கத்தா, 310, பர்வாலா,
253, டில்லி, 263. இவ்வாறு, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில்,
நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்,
முட்டைக் கோழி விலை, கிலோ, 58 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில்
நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன்
விலை, கிலோ, 70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment