Translate

Monday, 27 May 2013

பேஸ்புக் தள பயன்பாடு இலவசம்


 

 

 

 

 

 

பேஸ்புக் தள பயன்பாடு இலவசம்






நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஆஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது. பேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகேஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது. இதனுடன் Foursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏர்டெல் நிறுவனம், தங்களின் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் தளத்தை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதி கொடுத்தது. ரிலையன்ஸ் மாதம் ரூ. 16 பெற்றுக் கொண்டு, பேஸ்புக் தளத் தொடர்பினை வழங்கியது. முதல் முறையாக, நோக்கியா போன்ற மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகையினைத் தருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இங்கு, வரும் ஜூன் மாதம் வர்த்தக ரீதியாக வெளியாக இருக்கும், நோக்கியா ஆஷா 501 போனுடன் இந்த சலுகைக் கட்டாயமாகக் கிடைக்கும்.

No comments:

Post a Comment