Translate

Monday, 27 May 2013

எரிவாயு வளம் கண்டுபிடிப்பு:அரசுக்கு ரிலையன்ஸ் தகவல்

எரிவாயு வளம் கண்டுபிடிப்பு:அரசுக்கு ரிலையன்ஸ் தகவல்

மும்பை:கிழக்கு கோதாவரி படுகையில், கே.ஜி.டீ6எண்ணெய்வயலில், புதிய எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.கடந்த, 18 மாதங்களாக நடைபெற்று வந்த துரப்பணப் பணியில், தற்போது தான் எரிவாயு உள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட துரப்பணப் பகுதியில், எந்த அளவிற்கு எரிவாயு வளம் உள்ளது என்பதையும், அதன் தரத்தையும் அறிவதற்கான முயற்சிகள்,தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரும் மாதங்களில், இப்பணிகள் முடிவடைந்த பின்னர் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.டீ6 எண்ணெய்வயல் சார்ந்த முதலீட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 60 சதவீத பங்கு மூலதனத்தையும், பாரத் பெட்ரோலியம் மற்றும் நிக்கோ நிறுவனங்கள், முறையே, 30 மற்றும் 10 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment