ஓடி ஓடி அசத்தும் ஆடி கி7
ஆடிQ7 செயல்திறன்: மேடு பள்ளங்களை மிகவும் எளிதாக ஏறி இறங்கவும், சட்டென்று எந்த அதிர்வும் இன்றி திசையை மாற்றவும், செங்குத்தான திருப்பங்களிலும் மென்மையாய் திரும்பவும், அதிவேக பயணத்தை சுலபமாய் கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து பொறியியல் தொழில்நுட்பங்களும் இதில் சிறப்பாய் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடிQ7 இல் உள்ளது CRD 3 லிட்டர் V6 சிலிண்டர் மற்றும் 4.2லிட்டர் V8 சிலிண்டர் TDI க்வாட்ரோ டெக்னாலஜி கொண்ட டீசல் என்ஜின்களாகும். இவை முறையே 2967 மற்றும் 4139 சிசி திறன் கொண்டதும், 180 KW பவரை 3800-4400 ஆர்பி எம்மிலும், 250 KW பவரை 4000 ஆர்பிஎம்மிலும் கொடுக்கக் கூடியதும் ஆகும். இவற்றின் டார்க் முறையே 550 NM 1750-2750 ஆர்பிஎம்மிலும் கொடுக்கக்கூடியதாகும்.
இதன் பெட்ரோல் வெர்ஷனில் 3லிட்டர், V6 சிலிண்டர் TFSI க்வாட்ரோ டெக்னாலஜி கொண்ட ரைடக்ட் ப்யூவல் இன்ஜெக்ஷன் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 2995சிசி திறனுடன் 245 KW பவரையும் 5500-6500 ஆர்பிஎம்மிலும், 440 NM டார்க்கை 2900-5300 ஆர்பிஎம்மிலும் கொடுக்கக் கூடியதாகும். மனதை பிரமிக்க வைக்கும் பவரையும் டார்க்கையும் வழங்கும் ஆடிQ7 64 நொடியில் 0 விலிருந்து 100கிமீ வேகத்தை அடைகிறது. இது மேலும் 240 கிலோமீட்டர் மணிக்கு என்ற அதிகபட்ச வேகத்தை எட்டக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆடிQ7 இன் உட்புறம்: இதன் உள்ளே ஏறி அமரும் முன் இருமுறை சிந்தித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் ஏறிவிட்டால் இறங்கவே மனம் வருவதில்லை என்று கூறும் வகையில் இதன் உட்புற அமைப்பு மிகவும் கவர்ச்சியாகவும் சொகுசாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் லெதரினால் ஆன 4 நிறங்களில் கிடைக்கின்ற சீட், தலை, கால் மற்றும் தோள்களுக்கு நெருக்கடியில்லாத தோதான இட வசதி, ஏழுபேர் தாராளமாய் அமர்ந்து செல்லக்கூடிய சீட்கள், சக்தி வாய்ந்த த்ரீ ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்டைலான மல்டி பவர் ஸ்டியரிங் என்று இதன் சொகுசம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். க்ரூபிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் டிம்மிங் கொண்ட உட்புற கண்ணாடி, ரெயின் பவர் ஃபுல்லான ஆடி மியூசிக் இன்டர்ஃபேஸ், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என்று உயர்தரமான வசதி மற்றும் உபயோகமான அம்சங்கள் இதில் நிறைய உள்ளது.
ஆடிQ7 பாதுகாப்பு: எவ்வளவு கடினமான சூழ்நிலையானாலும் ஓட்டுனர் சிரமப்படாமல் கட்டுப்படுத்தவும், வண்டி தன் ஸ்திரத்தன்மையை துளிக்கூட இழக்காத வண்ணமும் பல விதமான பொறியியல் தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் புத்திசாலித்தனமாக இயங்கக்கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் ப்ரோக்ராம் (ESP) இதில் உள்ளதால் அதன் மற்ற பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ், ஏஎஸ்ஆர், இடிஎல் மற்றும் இபிடி போன்றவைகளை இணைத்து பாதுகாப்பான சுலபமான பயணத்தை வழங்குகிறது. ஸ்டான்டர்ட் டே டைம் ரன்னிங் லைட், எல்இடி பின்புற விளக்குகள், எல்இடி இன்டிகேட்டர்கள், ஜென்னான் விளக்குகள், க்ராஷ் சென்சார், என்ஜின் செக் வார்னிங் போன்றவைகள் இதன் மற்ற பாதுகாப்பு அம்சங்களாகும்.
ஆடிQ7 இல் எலக்ட்ரானிக் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. இதன் வேரியபிள் அடாப்டிவ் டாம்பிங் சிஸ்டம் நான்கு வீல்களுக்கும் உள்ளதால் இது தானாகவே இந்த எஸ்யுவியின் அதிர்வுகளை கட்டுப்படுத்துகிறது. இதில் ஆட்டோமேட்டிக், கம்ஃபோர்ட், டைனமிக், ஆஃப்ரோட் மற்றும் லிஃப்ட் மோட் என்று ஐந்து நிலைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்களை மல்டி மீடியோ இன்டர்ஃபேஸ் மூலம் (MMI) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆடிQ7 வெளித்தோற்றம்: கம்பீரமான பிரம்மாண்டமான இதன் கட்டமைப்பு ஏரோடைனமிக் வடிவத்தில் உள்ளது. ஆர்ச் போன்ற வளைவு கொண்ட மேற்கூரை ஸ்போர்டியான கூப்பே வடிவத்தை இதற்கு அளிக்கிறது. க்ரோம் ஃப்ரேம் கொண்ட ஆடியின் லோகோ கொண்ட க்ரில், 'V' வடிவ கூம்பான பானட், கன்ட்ராஸ்ட் நிறம் கொண்ட பம்பர்கள், ஜெனான ஹெட்லைட் போன்றவை தூரத்தில் வரும்போதே இதன் இருப்பை அனைவருக்கும் அறிவிக்கிறது. பெரிய வீல்கள், இதன் கம்பீரத்தை மேலும் அதிகமாக்குகிறது.
இரவோ பகலோ, நகரமோ கிராமமோ, நெடுஞ்சாலையோ, நகர நெரிசலோ, எங்கும் எதிலும் தன் சிறப்பையும், திறனையும் ஓட்டுனருக்கும், மற்றவர்களுக்கும் எப்பொழுதும் உணர்த்துவதாகவே உள்ளது ஆடிQ7.
No comments:
Post a Comment