ஒதுக்கீடுகளால் பொது துறை வங்கிகளின் லாபம் பாதிப்பு
மும்பை:கடந்த, 2012-13ம் நிதியாண்டின், மார்ச்
மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், வசூலாகாத கடன்உள்ளிட்ட அதிக
ஒதுக்கீடுகளினால், பல பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் குறைந்துள்ளதாக,
தெரியவந்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பீ.ஐ.,) நிகர லாபம், சென்ற நிதியாண்டின்
நான்காவது காலாண்டில், அதிக ஒதுக்கீடுகளினால், முந்தைய நிதியாண்டின் இதே
காலாண்டை விட, 18.5 சதவீதம் குறைந்து, 3,299 கோடி ரூபாயாகசரிவடைந்துள்ளது.
இவ்வங்கி, வசூலாகாத கடன் போன்ற வற்றிற்காக, 40 சதவீத தொகையை(3,974 கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்துள்ளது.இதே போன்று, மற்றொரு பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின், ஒதுக்கீடுகளுக்கான தொகை, 126.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், 20.6 சதவீதம் குறைந்துள்ளது.பேங்க் ஆப் பரோடாவின், ஒதுக்கீட்டு தொகை, 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 32 சதவீதம் சரிவடைந்து உள்ளது.கணக்கீட்டு காலாண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கியின், வசூலாகாத கடனுக்கான ஒதுக்கீட்டு தொகை, 12 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், இதர ஒதுக்கீடுகளுக்கான தொகை, 634 சதவீதம் அதிகரித்துள்ளது.இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், 20.6 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment