Translate

Tuesday, 7 May 2013

கூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

கூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

கூகுலில் வேலைக்கு சேர வேண்டுமா நீங்கள் கஜினி முகம்மதுவை விட மனதிடம் உள்ளவராக இருக்க வேண்டும். அவரோ 18 முறைதான் படை எடுத்தார். ஆனால் நீங்கள் 29 முறையாவது ஒரு வேலைக்கு இண்டர்வ்யூ போகவேண்டும். அதற்கு ரெடியா அப்ப மேல படியுங்கள்.

கூகுலில் எப்படி வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற விபரத்தை Job Network portal Jobvine -வெளியிட்டுள்ள இன்ஃபோ கிராபிக்ஸ் மூலம் நாம் அறியலாம்.

ஒவ்வொரு வருடமும் கூகுலுக்கு ஒன் மில்லியன் (One million resumes )வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதில் இருந்து 4k – to 6k மக்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அது மிக எளிதான காரியம் அல்ல அதையும் அது செய்கின்றது என்றால் அதற்கு பெயர்தான் கூகுல்!!!!

கூகுல் கம்பெனியில் எந்த இடத்தில் என்ன மாதிரியான வேலைக்கு ஆட்கள் தேவைபடுகிறார்கள் என்ற வேலைவாய்ப்பு பற்றிய விபரங்களுக்கு – http://www.google.com/intl/en/jobs/index.html

No comments:

Post a Comment