15 குட்டிகளைப் போட்ட அதிசய றொமி!
ஒன்று இரண்டல்ல மொத்தம் 15 குட்டிகளைப் போட்டிருக்கிறது இந்த மூன்று வயதான றொமி. இது ஒரு Irish Setter வகை நாய். சிறு சிறு இடைவெளி விட்டு தொடர்ச்சியாக 15 குட்டிகளை ஈன்றிருக்கிறது இந்த நாய். அதனால் மிகவும் களைத்துப் போய்விட்டது. அதில் 10 பெண் நாய்க் குட்டிகளும், 5 ஆண் நாய்க் குட்டிகளும் இருந்தன. நான்கு வரங்கள் கர்ப்பமாக இருந்த போது ஸ்கான் எடுத்துப் பார்த்ததில் எடு அல்லது ஒன்பது குட்டிகள் தான் இருப்பதாக நினைத்தோம். ஆனால் 15 குட்டிகள் போட்டது ஆச்சரியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். 15 குட்டிகளுக்கும் ஊட்டுவதற்கு நாயிடம் பால் பற்றாக்குறை காரணமாக புட்டிப்பாலும் வழங்கப்படுகின்றது. குறித்த வகை நாய் இவ்வாறு 15 குட்டிகளைப் போடுவது அரிதான சம்பவம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment