17 சதவீதம் நகர்புற இந்தியர்களுக்கு சிறுநீரக பாதிப்பு : ஆய்வில் தகவல்
புதுடில்லி : நகர்புறங்களில் வசிக்கும் இந்தியர்களில் நூறில் 17 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரம் தொடர்பான நோய்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 6 சதவீதம் பேர் மூன்றாம் நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகி உள்ளதாகவும், இவர்கள் கட்டாய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும், மேலும் சிலர் அதிகம் செலவாகும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டிய நிலையிலும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஆய்வு :
நாடு முழுவதிலும் உள்ள 12 நகரங்களில் உள்ள 13 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோய்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிராமப்புறங்களை விட நகரபுறங்களில் வசிக்கும் நூறு பேரில் 17 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவர்களை பெரிதும் அதிர வைத்த தகவல், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோயுடன் இருப்பதாகும். குரோனிக் கிட்னி டிசீஸ் எனப்படும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோய்களைக் கொண்டவர்கள் அதற்கு முன் சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு சோதனையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
டாக்டர்கள் தகவல் :
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தற்காப்பு சோதனைகள் செய்து கொள்வதில்லை; அதன் விளைவு தாமதமாக நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன; தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 64.5 சதவீதம் பேர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் அதிகப்படியான மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 4.7 சதவீதம் பேர் ரத்தசோகை நோயாலும், 31.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்; முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது அவர்களது சிறுநீரகம் பாதிக்கும் மேல் செயல்இழக்க துவங்கிய நிலையில் உள்ளது; ஒருவேளை அவர்கள் முன்னதாகவோ அல்லது முதல் மற்றும் இரண்டாம் நிலையில் நோயை கண்டுபிடித்திருந்தால் அவற்றை மருந்துகள் மூலம் குணமாக்க முடியும்; குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு இருந்தால் மற்றவர்கள் சிறுநீரக தொற்று, சர்க்கரை நோய் மற்றும் ரத்தஅழுத்தம் தொடர்பான சோதனையை தொடர்ந்து முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்; இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான டில்லி ராம் மனோகர் லோகி மருத்துவமனையின் சிறுநீரக பிரிவின் தலைமை மருத்துவர் ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நகரங்களின் புள்ளிவிபரம்:
சிறுநீரக ஆய்வு மற்றும் ஆரம்பநிலை மதிப்பீட்டு ஆய்வு வாரணாசி, கான்பூர், டில்லி, லூதியானா, போபால், குஜராத்தின் நாடியாட், மும்பை, மைசூர், பெங்களூர், கொச்சின் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் 46.8 சதவீதம் பேர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விசாகப்பட்டினத்தை தொடர்ந்து கான்பூரில் 41.7 சதவீதம் பேரும், டில்லியில் 41 சதவீதம் பேரும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். குறைந்தபட்சமாக மைசூரில் 4.2 சதவீதம் பேரும், பெங்களூருவில் 4 சதவீதம் பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்கள் வராதபடி உரிய சோதனைகள் செய்து, அதனை காத்துக் கொள்ளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு எனவும், இவை இரண்டுமே அதிகம் செலவாகக் கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வளர்சிதை மாற்ற கோளாறுகள், எலும்பு நோய்கள், இதய நோய்கள், வாத நோய்களும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்களால் ஏற்படுவதாகும். ஆண்டுதோறும் சிறுநீரக மாற்று
No comments:
Post a Comment