Translate

Sunday, 9 June 2013

குடிபோதையில் தள்ளாடி மரத்தில் தொங்கிய மரை!

குடிபோதையில் தள்ளாடி மரத்தில் தொங்கிய மரை! (காணொளி இணைப்பு)

பொதுவாக மனிதர்கள் குடிபோதையில் அலம்புவதும் தெருவோரங்களிலும் விழுந்து கிடப்பதும் வழமை, ஆனால் விலங்குகள்… ஒரு மரை குடி போதையில் அப்பிள் மரத்தில் சிக்கியுள்ளது.

இச்சம்பவம் சுவிடன் நாட்டில் உள்ள கோட்டன்பர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து நேரில் பார்த்த ஜோஹன்சன் தெரிவிக்கையில்… எனது வீட்டு முற்றத்தில் நிற்கும் போது உறுமும் சத்தம் கேட்டது.

சத்தம் வரும் திசையை நோக்கி சென்று பார்த்த போது அப்பிள் மரத்தில் ஒரு மரை சிக்குண்டு காணப்படுவதை கண்டேன். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தேன் என்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த மரையை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இருந்தும் மீண்டும் அதே மாதிரி குடிபோதையில் அப்பிள் மரத்தில் தொங்கியது குறித்த விலங்கு…!

No comments:

Post a Comment