Translate

Monday, 10 June 2013

அடுத்த ஆண்டு ஐபேட்-3 வெர்ஷன் அறிமுகம்: ஆப்பிள் திட்டம்

அடுத்த ஆண்டு ஐபேட்-3 வெர்ஷன் அறிமுகம்: ஆப்பிள் திட்டம்


       உலக அளவில் டேப்லெட் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் ஐபேட் டேப்லெட்டின் புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தரம் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர் கைகளை ஆப்பிள் ஐபேட் கட்டிப்போட்டுள்ளது. மேலும், சந்தை போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களுடன் ஐபேட் புதிய மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து வருகிறது.
இந்த வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஐபேட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமி்ட்டுள்ளது. புதிய ஐபேட் வடிவமைப்பு பணிகள் முடிந்து சோதனை கட்டத்தில் இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபேட்-2 வெர்ஷனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், 2048*1536 பிக்செல் துல்லியத்துடன் கூடிய 9.7 இஞ்ச் தொடுதிரையுடன் ஐபேட்-3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், 15 லட்சம் ஐபேட்-3 டேப்லெட்டுகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விரைவில் வழங்குமாறு சப்ளையர்களிட் ஆர்டர் கொடுத்துள்ளது ஆப்பிள்.
இதனால், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஆப்பிள் ஐபேட்-3 தனது அழகையும், திறமையையும் வெளியுலகுக்கு காட்டும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மார்க்கெட்டில் புதிய ஆப்பிள் ஐபேட்-3 டேப்லெட் வழக்கம்போல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கருதப்படுகிறது

No comments:

Post a Comment