4700 அடி உயரத்திலுள்ள உலகின் ஆபத்தான பாதை மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு! (படங்கள் இணைப்பு)
உலகின் ஆபத்தான பாதை என்று மக்களால் வர்ணிக்கப்படும் இந்த மலை வளைவு சீனாவின் Zhangjiajie, பகுதியிலுள்ள செங்குத்தான மலையின் விளிம்பில் உள்ளது, 1909 ஆம் ஆண்டு தொழிலாளிகளின் பயணத்திற்காக மரத்தால் உருவாக்கப்பட்ட பாதை காலபோக்கில் முற்றிலும் சிதைந்து விட்டது,
இதன் பின்னர் இதில் பயணிப்பது தடை செய்யப்பட்டது, இப்பொழுது நவீன தோற்றத்துடன் கண்ணாடியால் இப்பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது, Skywalk எனப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 4,700ft உயரத்தில் அமைந்துள்ளது , மலையினுள் துளையிட்டு crystal-clear எனும் கண்ணாடித்தரை பொருத்தப்பட்டுள்ளது,
இந்த பாதையின் சிறப்பம்சமும் இதுதான் , இதன் மேலாக நடந்து செல்லும்போது நிலமட்டத்தை தெளிவாக பார்க்கமுடியும், 1.8 மைல் நீளமான இப்பாதை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் இது முக்கியமானது ,அதே வேளை ஆபத்தான இடங்களில் இன்னமும் இதுதான் முதலிடம்.
No comments:
Post a Comment