Translate

Saturday, 7 September 2013

ஹூண்டாயின் ஐ10 காரின் டீசல் மாடல் இல்லை

ஹூண்டாயின் ஐ10 காரின் டீசல் மாடல் இல்லை

ஐ10 காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று ஹூண்டாய் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கிராண்ட் ஐ10 காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் வந்துள்ளது. இந்நிலையில், ஹூண்டாய் மூத்த பொது மேலாளர் நலின் கபூர் வர்த்தக இதழுக்கு அளித்த பேட்டியில், ஐ10 காரின் டீசல் மாடலை களமிறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், டீசல் கார்களுக்கான மவுசு குறைந்து வருகிறது. இதனால், புதிய டீசல் மாடல்களை அறிமுகம் செய்வதை ஹூண்டாய் தவிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment