டோபல்.... ஆங்கிலத் திறனறிவுத் தேர்வு சில தகவல்கள்
* டோபல் என்பது Test of English as a Foreign Language என்பதன் சுருக்கம்
* மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவற்றில் எந்தப் படிப்பை படிப்பதானாலும் அதற்கு அடிப்படையில் ஆங்கிலத் திறன் தேவை என்பதால் டோபல் என்பதை ஆங்கிலத் திறனறியும் தேர்வாக வைத்துள்ளனர்
* 130 நாடுகளில் கல்வியை மேற்கொள்வதற்கான அடிப்படை ஆங்கிலத் திறனறியும் தேர்வாக டோபல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
* ஆங்கிலத்தில் படிப்பதில், எழுதுவதில் மற்றும் பேசுவதில் நமக்குள்ள திறன்கள் எப்படி என இது சோதிக்கிறது
* ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்களுக்கான தேர்வு இது
* இந்தியாவில் 10+2 முறையிலான கல்வியை முடித்திருப்பவர்கள் இதை எழுதலாம்
* கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக இது கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இதில் 4 பகுதிகள் உள்ளன
* ரீடிங், லிசனிங், ஸ்பீக்கிங் மற்றும் ரைட்டிங் என்னும் பகுதிகள் இவை
* ரீடிங் பகுதியில் 3 முதல் 5 பத்திகள் தரப்பட்டு அதிலிருந்து 36 முதல் 70 வரையிலான கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 60 முதல் 100 நிமிடங்கள் கால அளவு. இதற்கான மதிப்பெண் 30 வரையாகும்.
* லிசனிங் பகுதியில் 4 முதல் 6 விரிவுரைகளை கவனிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கால அளவு. ஒவ்வொரு விரிவுரையின் பின்பும் 6 கேள்விகள் கேட்கப்படும். இதில் உரையாடல் பகுதியும் இடம் பெறும். இதற்கும் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கால அளவு. இதற்கும் 30 வரை மதிப்பெண் உண்டு.
* ஸ்பீக்கிங் பகுதியில் குறிப்பிட்ட தலைப்பில் பேச வேண்டும். 2 தலைப்புகளில் இதைச் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கால அளவு. இதற்கும் 30 மதிப்பெண்கள் வரை உண்டு.
* ரைட்டிங் பகுதியில் 2 செய்முறை பிரிவுகள் உண்டு. இதற்கு 50 நிமிடங்கள் கால அளவு. இதற்கும் 30 மதிப்பெண்கள் வரை உண்டு.
No comments:
Post a Comment