விமான கம்பெனி வேலை
இந்துஸ்தான் ஏரொனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி இந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிமிடெட் மற்றும் ஏர்கிராப்ட் மேனுபேக்சரிங் டிப்போ ஆகியவற்றை இணைத்து 1964ல் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் 7 பிரிவுகளின் கீழ் உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவியில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: டெக்னிகல் பிரிவில் 200ம், மார்கெடிங்கில் 15ம், இண்டக்ரேட்டடு மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் 35ம், சட்டப் பிரிவில் 10ம், ஆர்க்கிடெக்சரில் 3ம், சிவிலில் 7ம், எச்.ஆர்., பிரிவில் 15ம் காலி இடங்கள் உள்ளன.
வயது: 11.10.2013 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி தேவை. டெக்னிகல் பதவிக்கு இன்ஜினியரிங் பட்டப் படிப்பு தேவை. அனைத்து பிரிவுகளுக்குமே தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு குறைந்தபட்ச தேவையாக உள்ளது.
தேர்ச்சி முறை: அகில இந்திய அளவில் ஆன்-லைன் தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : ரூ.500/-ஐ 30969511830 என்ற அக்கவுண்ட் எண்ணில் ஏஅஃ என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 11.10.2013 மதியம் 12.00 மணிக்குள் முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய
இணையதள முகவரி:
http://www.hal-india.com/careers/CO/MT-2013/detailed-advt.pdf
No comments:
Post a Comment