தென்னக ரயில்வேயில் காலி இடங்கள்
இந்தியாவின் மிகப்பெரும் பணி வாய்ப்பாளர் மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்கலில் மிகவும் பிரம்மாண்டமான நிறுவனம் என்பது போன்ற பெருமைகளை இந்திய ரயில்வே துறை வைத்துள்ளது. இந்திய சுதந்திர காலம் முதல் துவங்கி இன்று வரை இந்திய மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக திகழும் இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தென்னக ரயில்வேயில் குரூப் டி சார்ந்த பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: டிராக்மேன் -இன்ஜினியரிங்கில் 1539, எலக்ட்ரிகல் ஹெல்பரில் 642, எஸ்., அண்டு டி., ஹெல்பரில் 847, மெக்கானிகல் ஹெல்பரில் 588. பியூனில் 102, மெடிக்கல் சபாய்வாலாவில் 132, ஸ்டோர் கலாசியில் 92, டபிள்யூ.எஸ்., சார்ந்த ஹெல்பரில் 757,107 மற்றும் 261, கிரேடு 2 ப்யூன்/மாலில/சானிடரி கிளீனர்/வெண்டார் பிரிவில் 252, டிராக் மெயிண்டெய்னரில் 13 காலி இடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓ.பி.சி., பிரிவினர் 36 வயதுக்கு உட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 38 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதிகள்: பிரிவுக்கு ஏற்றபடி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படிப்பு அல்லது கூடுதல் கல்வித்தகுதி தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : ரூ.100/-க்கான டி.டி.,யை The Asst. Personnel Officer/Recruitment , RRC Chennai - 600 008 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 21.10.2013
No comments:
Post a Comment