iphone, ipod touch ல் வீடியோ மின்னஞ்சல் அனுப்புவதற்கான எளிய முறைகள்
உங்கள் iphone, ipod touch அல்லது ipad மூலம் வீடியோ மெயில் அனுப்ப வேண்டுமெனில் அதற்கு முதலில் மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும். அதன் பின் கீழே குறிப்பிட்டுள்ளதை பின்பற்றினால் சுலபமாக அனுப்பலாம்.
1. உங்கள் ஐபோன், ஐபாட் டச், அல்லது ஐபாட் ல் கமரா application ஐ திறக்கவும்.
2. முன்-எதிர்கொள்ளும் கமராவை (Front facing camera) activate பண்ண, திரையின் மேல் கமரா ஸ்விட்ச் பொத்தானை தட்டவும். (இப்போது திரையை உங்கள் பக்கம் திருப்பி பரிசோதித்து கொள்ளுங்கள் உங்கள் முகம் திரையிள் தெரிகிறதா என்று).
3. கமரா திரையில் கீழ் வலது பக்கம் ஒரு சுவிட்ச் இருக்கும். அது வழக்கமான கமரா மற்றும் வீடியோ கமரா இடையே செல்ல பயன்படுத்தும் toggle சுவிட்ச். அந்த சுவிட்ச் வலது பக்கம் இருந்தால், அது வீடியோ கமராவில் உள்ளது என்று அர்த்தம் அப்படி இல்லை என்றால்?அதை மாற்ற உங்கள் விரலால் வலது நோக்கி தேய்க்கவும்.
4. நீங்கள் தயாராக இருக்கும் போது பதிவு தொடங்க கீழே (நடுவில்) உள்ள சிவப்பு பொத்தானை அழுத்தவும். நீங்கள் உங்கள் செய்தியை பதிவு செய்து முடித்ததும், மீண்டும் அதே பொத்தானை அழுத்தவும். வீடியோ பதிவு 45 விநாடிகளுக்குள் வருமாறு பார்த்துக்கொள்ளவும்.
5. கமரா திரையின் கீழே உள்ள சிறு thumbnail ஐகான் ஐ பிரஸ் செய்தால், கமரா ரோல் திரைக்குள் செல்லும். திரையின் கீழே இடது மூலையில், Share button அதாவது அம்புடன் சதுரம் போல் உள்ள பொத்தானை தட்டவும். பின் மேலே உள்ள ஈமெயில் option ஐ தட்டவும், இப்போது ஐபோன் உங்கள் வீடியோவை தயார் செய்ய ஆரம்பித்து விடும்.
6. வீடியோ தான் தயாரிப்பு முடிந்ததும் ஒரு புதிய மின்னஞ்சல் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது என்று குறிக்கும் அதன் சின்னத்தையும் காட்டும்.
7. எப்பொழுதும் போல மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் அதன் தொடர்புடைய அனைத்தையும் நிரப்பி send என்னும் பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான் உங்கள் வீடியோ மெயில் அனுப்பியாச்சு, உங்கள் வீடியோ மெயில் சென்றடைய சிறு நேரம் எடுக்கும்.
No comments:
Post a Comment