Translate

Thursday, 17 October 2013

கடற்படை பைலட் வேலை

கடற்படை பைலட் வேலை

இந்திய கடல் படையின் பயிற்சிகள் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள எழிமலாவில் வழங்கப்படுகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த இம்மையத்தில் வரும் 2014 முதல் குறுகிய கால நிலை அடிப்படையிலான சிறப்பு அதிகாரி பதவிகளான பைலட் மற்றும் அப்சர்வர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: இந்திய கடல் படையின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990க்கு பின்னரும் 01.07.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பை கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவிலான பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் கூடுதலாக தேவைப்படும். 10 ஆண்டுகளுக்கான சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் பதவி நிரப்பப்படும். இதனை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
தேர்ச்சி முறை: கல்வித் தகுதி அடிப்படையில் எஸ்.எஸ்.பி., நேர்காணல்கள் நடத்தப்பட்டு இதர தேர்ச்சி முறைகளான உடல்தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுடன் தேர்ச்சி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். இதன் பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை இரண்டு காப்பிகள் எடுக்கவும். ஒரு நகலை இங்கே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உரிய இணைப்புகளுடன் அனுப்பவும். Post Box No. 02, Sarojini Nagar, New Delhi - 110 023 விண்ணப்பிக்க இறுதி நாள் : 18.10.2013 முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://www.nausena&bharti.nic.i

No comments:

Post a Comment