Translate

Thursday, 17 October 2013

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் டெக்னிகல் வேலை இருக்கு

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் டெக்னிகல் வேலை இருக்கு

 ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீட்டு உபயோகம், இன்ஜினியரிங், எரிசக்தி துறை, ரயில்வே, ஆட்டோமோடிவ், பாதுகாப்புத் துறை போன்ற அனைத்து துறைகளின் இரும்பு உபகரணத் தேவைகளை நிறைவேற்றுகிறது. இந்த நிறுவனத்தின் பிலாய் கிளையில் உள்ள 330 ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: செய்ல் நிறுவனத்தில் மெட்டலர்ஜி பிரிவில் 58ம், எலக்ட்ரிகலில் 25ம், மெக்கானிகல்/மெக்கட்ரானிக்ஸில் 167ம், ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸில் 5ம், எலக்ட்ரானிக்ஸில் 65ம், இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 10ம் காலி இடங்கள் உள்ளன. வயது: 01.09.2013 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதிகள்: 3 ஆண்டு படிக்கக் கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெட்டலர்ஜி, எலக்ட்ரிகல், மெக்கானிகல்/,மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி., இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் 2 ஆண்டு கால பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும். சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு அதன் பின்னர் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: BSP, SAIL என்ற பெயரிலான 32549519300 என்ற பாரத ஸ்டேட் வங்கியின் அக்கவுண்ட் எண்ணில் ரூ.250ஐ கட்டணமாக செலுத்தவும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 04.11.2013 முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : http://sail.shine.com/

No comments:

Post a Comment