ஏர்மேன் பணியிடங்கள்
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான படைகளில் இந்திய விமானப்படை ஒன்று. நவீனமயமான இந்தப் படையில் ஏர்மேன் பதவிக்கு தமிழ் நாடு, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் புதுவையைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : மெக்கானிகல் மற்றும் ஸ்மித் ஒர்க்-ஷாப் பிட்டர், ஸ்டரக்சர் பிட்டர், புரொபல்சன் பிட்டர், வெப்பன் பிட்டர், எலக்ட்ரிகல் பிட்டர், எலக்ட்ரானிக் பிட்டர், மெக்கானிகல் சிஸ்டம் பிட்டர் மற்றும் ஆட்டோமொபைல் பிட்டர். தேவைகள் : இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு காலம் படிக்கக் கூடிய டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கல்வி நிறுவனத்தின் மூலமாக படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறை: பிஸிக்கல் பிட்னஸ் டெஸ்ட் மற்றும் எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளின் மூலமாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : இந்த பதவிகளுக்கான தேர்ச்சி அக்டோபர் 18 முதல் 23 வரை ராமநாதபுரத்திலுள்ள சீதக்காதி சேதுபதி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி :indianairforce.nic.in/pdf/Ramnathpuram_%20%28Rally%29_Oct13.pdf>n/>
No comments:
Post a Comment