ரயில்வே அப்ரென்டிஸ் ஆகலாமா?
மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 01.01.2014 அன்று 17 வயது நிரம்பியவராகவும், 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1993க்கு பின்னரும் 01.01.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் 2ம் ஆண்டு, முதல் ஆண்டு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். படிக்கும் வருடத்தைப் பொறுத்து தகுதி நிலைகளில் சில மாறுதல்கள் இருக்கும். முழு விபரங்களை இணையதளத்தில் அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: எழுத்துத் தேர்வு மதுரை மற்றும் சென்னை மையங்களில் நடத்தப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.100/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேங்கிங் முறையிலோ செலுத்த வேண்டும். பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 04.11.2013 முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.upsc.gov.in/exams/notifications/2014/scra/scra_eng.pdf>
No comments:
Post a Comment