Translate

Sunday, 20 October 2013

இது தாங்க காதலுக்கும், கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்…

இது தாங்க காதலுக்கும், கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்…

‘காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை…’ என சொல்லப்படுவதுண்டு.

கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை.

இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில…

காதல் சண்டை…

காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா…திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு….

காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி… திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா…

காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது… திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்…

குழந்தைகள்…

காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்…. திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி…

காதல் பசியைக் குறைக்கும்… திருமணம் உடல் எடையைக் குறைக்கும்… (கவலைகளால்…)

டிவி யுத்தம்…

காதலுக்கு டிவி தேவையில்லை… திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்…

இளநீர் தத்துவம்…

காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா… திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத…’

அவ்ளோ தாங்க….

மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை….கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி…

Tags: கல்யாணம், காதல், சண்டை, வித்தியாசம்

No comments:

Post a Comment