பேஸ் புக் மூலம் அறிமுகமான சவூதி பெண்ணை நாய் போன்று நடக்கச் செய்த நபர் கைது
சவூதி அரேபிய பெண்ணொருவர் தனக்கு அனுப்பிய புகைப்படங்களை பகிரங்கப்படுத்தப்போவதாக மிரட்டி, அப்பெண்ணை நாய் போன்று நடந்து செல்ல நிர்ப்பந்தித்த நபர் ஒருவரை சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி ஆண், பேஸ்புக் மூலம் அப்பெண்ணுடன் தொடர்புகொண்டுள்ளார். தன்னை யுவதியொருவராகக் காட்டிக்கொண்டே அப்பெண்ணுக்கு மேற்படி ஆண் அறிமுகமானானாராம். அந்த யுவதி கோரியபடி தனது புகைப்படங்கள் பலவற்றை அவருக்கு மேற்படி பெண் அனுப்பியுள்ளார்.
அதன் பின்னரே யுவதியாக நடித்தவர் சிரியாவைச் சேர்ந்த ஒரு ஆண் என்ற உண்மை அப்பெண்ணுக்கு தெரியவந்தது.
அதையடுத்து, தன்னை வந்து சந்திக்குமாறு அப்பெண்ணை வலியுறுத்திய அவர், இல்லாவிட்டால் அவர் தனக்கு அனுப்பிய அனைத்து புகைப்படங்கள்இ அப்பெண்ணின் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட அனைத்து விபரங்களையும் பகிரங்கப்படுத்தப்போவதாக மிரட்டியுள்ளார்.
தன்னை விட்டுவிடுமாறு அப்பெண் கெஞ்சியுள்ளார். இந்த சிக்கலிலிருந்து விடுபடுவதற்காக அந்நபருக்கு பணம் வழங்கவும் அப்பெண் முன்வந்தார். ஆனால், மேற்படி ஆண் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து அப்பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இறுதியில் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற மேற்படி பெண், அந்நபருக்குத் தேவையான எந்தளவு பணத்தையும் வழங்கத் தயார் எனவும் தன்னை விட்டுவிடுமாறும் கோரினார்.
ஆனால், அதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்த அந்நபர் அப்பெண்ணை நாய்போன்று நடந்துசெல்ல நிர்ப்பந்தித்ததுடன் அவரின் வாயில் பாதணியொன்றையும் கொழுவினராம். பல தடவை இவ்வாறு அந்நபர் செய்ததாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நபரை கொல்வது அல்லது தான் தற்கொலை செய்துகொள்வது குறித்தும் அப்பெண் யோசித்தார். இறுதியில் அந்த யோசனைகளை கைவிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்தாராம்.
மேற்படி முறைப்பாட்டையடுத்து, றியாத் நகரில் 20 மணித்தியாலங்கள் தேடுதல் நடத்திய பொலிஸார், அந்நபரை கைது செய்துள்ளனர் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment