Translate

Monday, 7 October 2013

பொது அறிவு

பொது அறிவு

1. உடலின் போர் வீரர்கள் என அழைக்கப்படும் அணுக்கள்?
அ) தட்டணுக்கள்
ஆ) நுண்தகடுகள்
இ) சிவப்பணுக்கள்
ஈ) வெள்ளையணுக்கள்

2. சூரியன் எந்த ரேகையின் மேல் செங்குத்தாக விழும் போது சமமான பகலிரவு நாள் ஏற்படுகிறது?
அ) கடக ரேகை
ஆ) மகர ரேகை
இ) பூமத்திய ரேகை
ஈ) இதில் எதுவுமில்லை

3. இந்தியாவில் மழைமறைவுப் பிரதேசமாக விளங்கும் பகுதி?
அ) மலபார் கடற்கரை
ஆ) மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதி
இ) காசி குன்றுகள்
ஈ) சிவாலிக் குன்றுகள்

4. கடல்காற்று மற்றும் நிலக்காற்று எதனால் உருவாகிறது?
அ) வெப்பச் சலனத்தால்
ஆ) வெப்பக் கதிர்வீச்சால்
இ) வெப்ப மாற்றத்தால்
ஈ) வெப்பக் கடத்தலால்

5. ஒலி உண்டாவதை நிறுத்திய பிறகும், சிறிது நேரம் ஒலி கேட்பதற்கு காரணம்?
அ) ஒத்ததிர்வுகள்
ஆ) இயல்பதிர்வுகள்
இ) திணிப்பதிர்வுகள்
ஈ) எதிர் முழக்கம்

6. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்?
ஆ) மகாத்மா காந்தி
ஆ) ரவீந்திர நாத் தாகூர்
இ) தாதாபாய் நவுரோஜி
ஈ) கோபால கிருஷ்ண கோகலே

7. உலர்ந்த பனிக்கட்டி என்பது?
அ) குளிர்ச்சியான பனிக்கட்டி
ஆ) திட கார்பன் டை ஆக்சைடு
இ) பதப்படுத்தப்பட்ட பனிக்கட்டி
ஈ) இதில் எதுவுமில்லை

8. துளையற்ற காற்றிசைக்கருவி?
அ) ஆர்மோனியம்
ஆ) மிருதங்கம்
இ) சாரங்கி
ஈ) வீணை

9. சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும் எரிபொருள்?
அ) பெட்ரோல்
ஆ) எல்.பி.ஜி.,
இ) நிலக்கரி
ஈ) ஹைட்ரஜன்

10. மலைப்பகுதி மற்றும் மலைச்சரிவுகளில் பயிரிடப்படுவது?
அ) கோதுமை
ஆ) வாழை
இ) தேயிலை
ஈ) பருத்தி

விடைகள்
1. (ஈ) 2. (இ) 3. (ஆ) 4. (அ) 5. (ஈ) 6. (இ) 7. (ஆ) 8. (அ) 9. (ஈ) 10. (இ)

 

No comments:

Post a Comment