Translate

Monday, 7 October 2013

விமான நிலையங்களில் பணி வாய்ப்பு

விமான நிலையங்களில் பணி வாய்ப்பு

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் இளநிலை உதவியாளர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும்.
இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் இயக்குவதற்காக இந்த அமைப்பு 1995ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் டில்லி கிளையின் சார்பாக தீ தடுப்பு தொடர்புடைய இளநிலை உதவியாளர்கள் 100 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் தீ தடுப்பு இள நிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.10.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்: பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்று வருட டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் நேரடிப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ அளவிலான படிப்பை 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். உயரம் குறைந்த பட்சம் 167 செ.மி., இருக்க வேண்டும். இதர உடல் தகுதிகளும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், எண்டுயூரன்ஸ் டெஸ்ட், டிரைவிங் டெஸ்ட் மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை ரூ.400/-க்கான டி.டி.,யை Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து பின்வரும் முகவரிக்கு உரிய படிவ மாதிரியில் அனுப்ப வேண்டும்.

The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office,
Rangpuri, Gurgaon Road, New Delhi - 110037
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.10.2013
முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.aai.aero# sthash.gQiWURiv.dpuf

 

No comments:

Post a Comment