சீன நுகர்வோரிடம் மன்னிப்புக் கோரிய செம்சுங்
தென்கொரிய நிறுவனமான செம்சுங் ஸ்மார்ட் போன் சந்தையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகின்றது.
எனினும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவமொன்று சீனாவில் செம்சுங்கிற்கு இடம்பெற்றுள்ளது.
ஆம், செம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் சில ஒழுங்காக இயங்குவதில்லையெனவும் அவற்றை திருத்திக் கொடுப்பதில் செம்சுங் சரியாக அக்கறை காட்டுவதில்லையெனவும் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
அதுவும் சீன அரச தொலைக்காட்சியில் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
இதனால் ஆடிப்போன செம்சுங் உடனடியாக சீன பாவனையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
பழுதடைந்த மெமரி சிப்களினால் சில செம்சுங் ஸ்மார்ட் போன்கள் அடிக்கடி நின்று போவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் கெலக்ஸி எஸ்3 மற்றும் நோட் 2 உட்பட 7 மாதிரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 14% சீனாவில் இருந்தே ஈட்டப்படுகின்றது.
எனவே இவ்வறிக்கை அதற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இலவசமாக அவற்றை திருத்தித் தருவதாக செம்சுங் அறிவித்துள்ளது.
Tags: செம்சுங், மன்னிப்பு
No comments:
Post a Comment