Translate

Wednesday, 27 November 2013

ஆப்பிளில் புதியதாக வரவிருக்கும் 3D சென்சார்

ஆப்பிளில் புதியதாக வரவிருக்கும் 3D சென்சார்

ஆப்பிள் நிறுவனம் புதியதாக ஒரு 3-டி சென்சாா் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம்முழுக்க முழுக்க இஸ்ரேலை அடிப்படையாக கொண்ட நிறுவனம் ஆகும்.

ப்ரைம் சென்ஸ்(Primesense) என்பது தான் அந்த நிறுவனத்தின் பெயர், இந்த நிறுவனத்தின் தனித்துவம் என்னவென்றால் சென்சாரின் உதவி கொண்டு நாம் மொபைல்,ஸ்மார்ட் ஃபோன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை தொடர்பு கொள்ளலாம்.இந்த நிறுவனத்தின் டெக்னாலஜி ஆனது விளையாட்டு சாதனங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துகாட்டாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான xbox 360 விளையாட்டு சாதனத்தின்கட்டுப்பாடு போலவே இதுவும் இருக்கும். அதவது கட்டுப்பாட்டு கருவியின் உதவி இல்லாமல் நமது உடலின் அசைவு மற்றும் குரலை கொண்டு விளையாட்டை இயக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இதுபோன்று அதிகமாக சிறிய நிறுவனங்களை வாங்கியுள்ளது.அதுமட்டுமில்லாமல் ஆப்பிள் இன்னும் சில வழிகளில் விளையாட்டை இயக்க திட்டமிட்டுள்ளது. அதவது ipad முலமாக ஆப்பிள் டிவியை தொடர்பு கொள்ள முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப்ப ஆலோசகா் ஆன கரொலினா மிலன்சி கூறியுள்ளார்.

மேலும் மிலன்சி கூறியுள்ளதாவது, யுகிக்கும் முறையைக்கொண்டு பல்வேறு சாதனங்கள் இயங்கிவருகின்றன. இது தொடுதல் மற்றும் குரல் கட்டுப்பாட்டை காட்டிலும் மிகவும் எளிமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment