Translate

Monday, 25 November 2013

பட்ஜெட் விலை மொபைல் போன்

பட்ஜெட் விலை மொபைல் போன்
 
அனைவரும் வாங்கும் வகையில், நல்ல பட்ஜெட் விலை போன் ஒன்றைத் தேடிய போது, நோக்கியா நிறுவனம் அண்மையில் வழங்கிய நோக்கியா 107 மொபைல் போன் நம் கவனத்தை ஈர்த்தது.
இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். 2ஜி நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 75.8 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த போன், கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் வண்ணத்திரை 1.8 அங்குல அகலம் உடையது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தி 16 ஜிபி வரை, இதன் ஸ்டோரேஜ் திறனை உயர்த்தலாம். எப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,020 mAh திறன் கொண்டது. 576 மணி நேரம் இதன் மின் சக்தி தங்குகிறது. தொடர்ந்து 12 மணி நேரம் பேசலாம். இசை கேட்பதாக இருந்தால், 35 மணி நேரம் தொடர்ந்து கேட்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 1,579 மட்டுமே.
 

No comments:

Post a Comment