டெல்லியில் புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்: முழு விபரம்
டிசைன்
மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டியின் முன்புறம் முற்றிலுமாக புதிதாக மாறியிருக்கிறது. மேலும், 4,440 மிமீ நீளம் கொண்ட அதே சிட்டி காரில் தற்போது கூடுதல் வீல் பேஸ் 50 மிமீ கூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், உட்புற இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஞ்சின்
1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்டதாக புதிய ஹோண்டா சிட்டி வருகிறது. இதில், 96 பிஎச்பி திறன் கொண்ட அமேஸ் காரின் டீசல் எஞ்சின், சிட்டி காருக்காக 116 பிஎச்பி திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
கியர் பாக்ஸ்
பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் பேடில் ஷிப்ட் கொண்ட 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும்.
புதிய வசதிகள்
ஹேண்ட்ஸ் ஃப்ரீ, ஆக்ஸ், ஐபாட், யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதிகள் அடக்கிய 5 இஞ்ச் திரை, ரியர் ஏசி வென்ட்டுகள், 8 ஸ்பீக்கர்கள், 4 மொபைல் சார்ஜர்கள், கண்ணாடி கூரை, டச் பேனல் கொண்ட ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், சுறா மீன் துடுப்பு வடிவ ஆன்டென்னா ஆகியவை புதிதாக இடம்பிடித்துள்ளன.
உற்பத்தி
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா ஆலையில் இந்த மாத இறுதியில் புதிய ஹோண்டா சிட்டி உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதற்காக, மூன்று ஷிப்ட்டுகளில் கார் உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
விற்பனை எப்போது?
வரும் ஜனவரி மாதத்தில் புதிய ஹோண்டா சிட்டியை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா. விலை உள்ளிட்ட கூடுதல் விபங்கள் அப்போது வெளியிடப்படும்.
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி படு அசத்தலாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மூன்று தலைமுறைகளாக பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா சிட்டி முதன்முறையாக டீசல் மாடலிலும் விற்பனைக்கு வருகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
No comments:
Post a Comment