நான்கு சக்கர வாகனங்கள்
தண்ணீர் இல்லாமல் கார் வாஷ் - ஹெர்ட்ஸ் அறிவிப்பு!!
கூட்டணி
க்ரீன் டீம் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் கார் கழுவுவதற்கான புதிய ரசாயன கரைசலை கண்டுபிடித்து வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 220 ஹெர்ட்ஸ் கார் பராமரிப்பு மையங்களில் தற்போது இந்த புதிய கரைசலை பயன்படுத்தி கார் கழுவும் முறை பரீச்சார்த்த முறையில் கொண்டு வரப்பட உள்ளது.
எளிதான சுத்தம்
6 முதல் 8 அவுன்ஸ் அளவுக்கு ரசாயன கரைசலை கார் மீது ஸ்பிரே பாட்டில் மூலம் தெளிக்க வேண்டும். 8 நிமிடங்கள் கழித்து உயர்தர மைக்ரோஃபைபர் துணி மூலம் காரை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். பின்னர், கார் பாலிஷ் பயன்படுத்தி காரை பளிச்சென்று மாற்றிவிட முடிகிறது என ஹெர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
புது டெக்னிக்
க்ரீன் டீம் தயாரித்துக் கொடுக்கும் கரைசலை காரில் தெளிக்கும்போது அது, காரின் மேற்புறத்தில் இருக்கும் அழுக்குகளை கவ்விப் பிடித்து நீக்கிவிடும். அதேவேளை, கார் பெயிண்ட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதாம்.
சுற்றுச்சூழலுக்கும் உகந்தது
இது நச்சுத்தன்மையற்ற அடர்த்தியான கரைசல் என்றும் சுற்றுச்சூழலுக்கு மிக உகந்த அம்சங்களை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மிச்சம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 3,700 ஹெர்ட்ஸ் கார் பராமரிப்பு மையங்களில் இந்த புதிய கரைசல் முலம் கார் கழுவும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதன்மூலம், ஆண்டுக்கு 492 மில்லியன் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் காரை கழுவும் புதிய முறையை ஹெர்ட்ஸ் வாடகை கார் நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிகப்பெரிய வாடகை கார் நிறுவனமாக ஹெர்ட்ஸ் விளங்குகிறது.
இந்த நிறுவனத்துக்கு கார்களை சுத்தமாக பராமரிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதாவது, கார்களை அடிக்கடி கழுவுவதால் பெருமளவு தண்ணீரை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது தண்ணீர் இல்லாமல் கார் கழுவும் முறையை அந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
No comments:
Post a Comment